சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த 12 பேர் கைது

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 02:32 PM
image

சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை சட்டவிரோதமாக   கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கைகளின் போது 04 டிங்கி படகுகள், சுமார் 1,670  கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.  

மீன் வளத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படையினர் கொண்டச்சிக்குடா பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது  கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 12 பேர்,   கடலட்டைகள்   மற்றும்  கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53
news-image

சிறையில் உள்ள கணவருக்குப் போதைப்பொருள் கொண்டு...

2024-02-23 09:49:27
news-image

இன்றைய வானிலை !

2024-02-23 06:40:15
news-image

மக்களே அவதானம் ! வெப்பமான வானிலை...

2024-02-22 17:19:18
news-image

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் மீனவர்களும்...

2024-02-23 02:54:13