மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி தேவாலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

30 Nov, 2023 | 11:52 AM
image

ன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி தேவாலய திருவிழா நேற்று புதன்கிழமை (29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேசாலை புனித வெற்றி நாயகி தேவாலய திருவிழா இடம்பெறவுள்ள நிலையில், நேற்று மாலை பங்குத்தந்தை, அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் கிராம மக்கள் ஒன்றுகூட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 7ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையும், 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.

தொடர்ந்து 25ஆம் திகதி திங்கட்கிழமை இயேசு பிறப்பு விழாவும், 2024 ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை புதுவருடப்பிறப்பு விழாவும், ஜனவரி 6ஆம் திகதி சனிக்கிழமை மூவரசர் திருவிழாவும் (காணிக்கை திருவிழா) கொண்டாடப்படும்.

இந்நிலையில், நான்கு திருவிழாக்களை கொண்டாடும் வகையில் ஒரு கொடி ஏற்றப்பட்டு, ஒரு குடையின் கீழ் உள்ள மக்களாக பேசாலை சமூகம் திருவிழா நாட்களை கொண்டாடி மகிழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47