ராகம பொது வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்த நடமாடும் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
அலுவலகத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த இடத்துக்கு அருகே காத்திருந்த அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் குளிர்பான பெட்டியில் அடைத்து புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர்.
புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் இவ்வகையான மருந்துகள் விற்பனை பிரதிநிதி ஒருவரால் தமக்கு வழங்கப்படுவதாகவும், குறித்த மருந்துகள் தமக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இவ்வாறு விற்பனையில் ஈடுபட்டவர் ராகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவரிடம் 16 வகையான தடுப்பூசிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM