இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுமார் 21,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 26 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20,576 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிடுகிறது.
இதன்போது 715 கிலோகிராம் 509 கிராம் ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் பெறுமதி 17,887 மில்லியன் ரூபாவாகும்.
மேலும், 3641 கிலோ 15 கிராம் கேரள கஞ்சாவும் 50 கிலோ 288 கிராம் உள்ளூர் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருளின் பெறுமதி 1,456 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது. 10 கிலோ கிராம் 755 கிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 95 மில்லியன் ரூபா என்றும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM