கடன்வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
இந்த இணக்கப்பாடு இலங்கைக்கான நான்குவருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல்தொகுதி நிதி உதவி குறித்த மறுஆய்வினை பூர்த்தி செய்வதற்கு உதவும் என இலங்கைக்கான சர்வதேசநாணயநிதிய பிரதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று சபை டிசம்பர் நடுப்பகுதியில் மீளாய்வை முன்னெடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் அளவுறுக்கு ஏற்ப இலங்கையின் கடன்மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான குறிப்பிட்ட நிதி விதிமுறைகள் குறித்து இலங்கையுடன் கொள்கையளில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.
கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் உட்பட 17 நாடுகள் மே 9ம் திகதி உருவாக்கின என உத்தியோகபூர்வ கடன் குழு தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் இந்த குழு இலங்கை சர்வதேச நாணயநிதியம் உலக வங்கி சீனா மற்றும் இலங்கைக்ககு கடன்வழங்கிய தனியார்கள் உடன் தீவிரபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் விதத்தில் கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் உத்தியோகபூர்வ கடன்குழுவும் இணங்கியுள்ளன என கடன்குழு தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM