மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 10:37 AM
image

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீதிமன்ற  வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த நபர் சிறைச்சாலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் மயங்கி வீழ்ததையடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29)  சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் ...

2024-02-26 20:21:38
news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29