மலையகம் 200 : "யாழில் மலையகத்தை உணர்வோம்" நிகழ்வு இன்று ஆரம்பம் 

30 Nov, 2023 | 10:38 AM
image

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (30) ஆரம்பமாகும் நிகழ்வு நாளை டிசம்பர் 1ஆம், 2ஆம், 3ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறுகிறது. 

இந்நிகழ்வின் விசேட அமர்வுகளாக அரசியல் களம், புலமைக்களம் மற்றும் ஆற்றுகைக்களம் என்பன எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளது.

மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலைமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல், புலமைப் பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகளில் மலையகத்தின் 200 வருடகால வரலாற்றுப் பயணத்தை உணர்ந்துகொள்ளவும், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை பெற உணர்வு ரீதியாக ஆதரவளிக்கவும், அவர்களின் முன்னெடுப்புக்களில் பங்குகேற்கவும் இந்த ஒன்றுகூடல் வழிவகுக்கும்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் இன்றும் திருப்தியளிக்கக்கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை.

கல்வி, சுகாதாரம், அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவுச்சுவடாகவே காணப்படுகிறது.

உரிமை சார் விடயங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளல் இன்னும் பெரிய வெற்றிடமாகவே உள்ளது. 

இதனை அடிப்படையாக கொண்டு மலையகத்தையும் மக்களையும் புரிந்துகொண்டுள்ளோம் எனும் ஒத்துணர்வை வெளிப்படுத்த யாழ் மாவட்டத்திலும் வடக்கிலும் உள்ள மக்கள் முக்கியமாக இளையோர் "யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்" நிகழ்வுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

பாடசாலைகள், பல்கலைக்கழக, உயர்கல்வி நிறுவன மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 3ஆம் திகதி வரை இக்கண்காட்சி, பகிர்வு மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம். 

மேலும், இதன்போது கண்காட்சி (ஓவியம், டிஜிட்டல் திரை, காணொளி), மனித நூலகம், சிறுவர் நாடகங்கள், டிஜிட்டல் ஆவணக் கண்காட்சி, ஆவணப்பட திரையிடல், வாழ்வியல் பகிர்வுகள், சமூக செயற்பாட்டு பகிர்வுக்களம், புகைப்பட கண்காட்சி, நூல் கண்காட்சி, ஊடக பகிர்வுக்களம், மலையக புள்ளிவிபர பகிர்வுத்தளம் அரசியல் பகிர்வுக்களம், புலமை பகிர்வுக்களம், ஆற்றுகைப் பகிர்வுக்களம் என பல அம்சங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47