கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்ஒருவர் கருத்து தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தில் டிரையல் அட்பார் விசாரணை இடம்பெறும்போது தங்களிற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அக்கறையின்மை காரணமாக நீதி 15 வருடங்களாக தாமதமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்தகராணகொடவிற்கு ஆதரவளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் சட்டமாஅதிபர் திணைக்களம் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டுகாணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது என தெரிவித்துள்ள காணாமலாக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் எனினும் கரணாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் பிள்ளைகளை யார் கடத்தினார்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்த விபரங்கள் கூட எங்களிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் எங்களிற்கு நீதிவழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேவிசம்பத் என அழைக்கப்படும் கடற்படை வீரரினால் கப்பத்திற்காக 11 இளைஞர்களும் கடத்தப்பட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2008 - 2009 இவர்கள் கொழும்புர் திருகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 இளைஞர்களில் ஐவர் 2008 செப்டம்பர் 17 ம் திகதி கடற்படையினரால் கடத்தப்பட்டனர் - கருப்பு டாட்டா இன்டிகோ வாகனத்தையும் கடற்படையினர் கொண்டுசென்றனர்.
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் ராஜீவ்நாகநாதன் பிரதீப் விஸ்வநாதன் முகமட் சஜித் திலகேஸ்வரம் ராமலிங்கம் ஜமால்தீன் திலான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணாமல்போன ஏனையவர்கள் கஸ்தூரியராச்சிகே ஜோன்ரீட் அமலன் லியோன் ரொசன் லியோன் அன்டனி கஸ்தூரியாராச்சி கனகராஜா ஜெகநாதன்.
இத்துடன் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் முகமட் அலி அன்வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM