மழை அதிகரிக்கும்...

30 Nov, 2023 | 06:21 AM
image

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறும் போது,

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தென்அந்தமான் மற்றும்  வங்காள விரிகுடாவின்  தென்கிழக்குப் பகுதிகளுடன்  இணைந்த கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது  மேற்கு முதல் வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் இன்றையளவில்  மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்குத் திசையில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும். 

ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொண்டு செயற்பாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சிலாபம் தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர்  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53
news-image

சிறையில் உள்ள கணவருக்குப் போதைப்பொருள் கொண்டு...

2024-02-23 09:49:27
news-image

இன்றைய வானிலை !

2024-02-23 06:40:15
news-image

மக்களே அவதானம் ! வெப்பமான வானிலை...

2024-02-22 17:19:18
news-image

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் மீனவர்களும்...

2024-02-23 02:54:13