சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி வருகிறது - அமைச்சர் பந்துல

Published By: Vishnu

29 Nov, 2023 | 08:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரிஷாத் பதியுதீன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவிக்கையில்,

மன்னார் புத்தளம் வீதி நூறு வருடங்களுக்கு முன்னர் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட வீதியாகும். 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் திறந்துவைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த பாதை வழியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருகின்றபோது நூறு கிலோமிட்டர் குறைவான தூரத்தில் வரலாம்.

இவ்வறு வந்துபோகும் போது 200 கிலாே மீட்டர் தூரம் குறைவாக வந்துபோகலாம். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. 

இந்த பாதையை நாங்கள் அரசாங்கத்தில் இருக்கின்றபோது கார்பட் இட்டு புதுப்பிக்கும்போது சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளிடமிருந்து உதவி பெற்று வழக்கு தொடுத்தார்கள்.

இதன் காரணமாக பார்பட் இடும் பணி நிறுத்தப்பட்டு சுமார் 30 கிலாே மீட்டர் வரை இன்னும் கார்பட் போடப்படாமல் இருக்கிறது.

அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி மன்னார் புத்தளம் வீதியை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு பாதையை மூடிவிடுமாறுபோடப்பட்டதல்ல. மாறாக பாதையை புனரமைப்பதற்கு எதிராகவே போடப்பட்டது. இதன் காரணமாக 4 வருடங்களாக இந்த பாதை மூடப்பட்டுள்ளது.

சவூதி நிதியத்தின் எஞ்சிய பணத்திலாவது இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி இந்த பாதையை மக்கள் பானைக்காக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்து பதிலளிக்கையில், 

அனைத்து வீதி அபிவிருத்திகளும் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்  இந்த கடன்கள் தற்போது பூரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.கடன் மறுசீரமைப்புக்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

அத்துடன் சவூதி நிதியத்தின் எஞ்சிய பணமும் தற்போது நிறைவடைந்துள்ளது. அதனால் வடக்கு கிழக்கு மாத்திரமின்றி சவூதி நிதியம் மூலம் ஏனைய மாகாணங்களுக்கும் அதிகமான உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் எதிர்வரும் காலத்தில் சவூதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம்.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36