மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்தார்.
அதன்படி, மன்னார் மாவட்டத்தில் ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (29) பகல் மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 250 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.
புத்தகப்பை வழங்கும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டு மாணவர்களுக்கு புத்தகப்பையினை வழங்கி வைத்தார்.
இந்திய உயர்ஸ்தானிகரின் சேவையை பாராட்டி, கோபால் பாக்லேவுக்கு பிரதி அமைச்சர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM