2024 ஆம் ஆண்டு முதல்  தனி நபரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாவை மேலதிக வரி வருமானமாக அறிவிட தீர்மானம் - சம்பிக்க

Published By: Vishnu

29 Nov, 2023 | 08:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெறுமதி சேர் (வற்) வரி உட்பட புதிய வரி கொள்கைகள் ஊடாக அடுத்த ஆண்டு தனிநபர் ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாவை மேலதிக வரி வருமானமாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வரி கொள்கை விரிவுப்படுத்தப்படுவதால் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும். வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவிட்டால் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும்  நகர அபிவிருத்தி  மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய  அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வரி கொள்கையை விரிவுப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.வரி விதிப்பை தவிர அரச வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்மொழியப்படவில்லை.

பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாகவும்,பண்டங்கள் மற்றும் பொருட்கள் மீதான வரியையும் ஒப்பீட்டளவில் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி கொள்கை விரிவுப்படுத்தல் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

 அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை  பெரும்பாலான அரசில்வாதிகள் உட்பட முக்கிய தரப்பினர் திருப்பிச் செலுத்தவில்லை.

இவ்வாறானவர்களிடமிருந்து 700 பில்லியன் ரூபாவை அரச வங்கிகள் அறவிட வேண்டியுள்ளது. பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்தாமல் இருப்பவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அரச வங்கிகளின் பிரதானிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பெயர் பட்டியல் கிடைத்தவுடன் ஊழலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் பலரின் உண்மை முகம் வெளிவரும்.

தேசிய இறைவரித் திணைக்களம் உட்பட முக்கிய நிறுவனங்கள் வரி அறவிடலை முறையாக மேற்கொள்கிறதா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வரி நிலுவை தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு மதுவரி திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினோம்.இதன் பின்னர் குறித்த நிறுவனங்கள்  நிலுவை வரியை செலுத்தியுள்ளன.

பாதுகாப்பற்ற பொது போக்குவரத்து சேவையே நடைமுறையில் உள்ளது.வாகன நெரிசல் காரணமாக ஒரு நாளைக்கு 1 பில்லியன் ரூபா நிதி வீண்விரயமாக்கப்படுகிறது.

பொது போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்த 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக தற்போதைய ஆளும் தரப்பினர் போர் கொடி உயர்த்தி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது அந்த கொள்கையையே செயற்படுத்துகிறார்கள். அபிவிருத்தி கொள்கை திட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியமைக்காமல் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:13:02
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12