தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை!

29 Nov, 2023 | 05:34 PM
image

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.

கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.  எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்,  அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.  அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம்.  அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32
news-image

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில்...

2024-02-22 10:51:12
news-image

கொவிட்தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் -சர்வதேச அளவில்...

2024-02-21 16:44:52
news-image

டெல்லி சலோ போராட்டம்: கண்ணீர் புகை...

2024-02-21 14:01:03
news-image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள்...

2024-02-21 12:02:00
news-image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு...

2024-02-21 11:36:09