உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு விழா

29 Nov, 2023 | 08:58 PM
image

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் உலகத் தமிழர்கள் முன்னிலையில் ‘ஐம்பெரும் விழா’ ஜனவரி 6 மற்றும் 7ஆம் திகதிகளில் தமிழ்நாடு, சென்னை திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் ‘முத்தமிழ் அறிஞருக்கு முத்தமிழால் வணக்கம்’ என போற்றும் வகையில் இயல், இசை, நாடகம் மற்றும் தமிழ் திரைத்துறைக்கு கலைஞர் மு.கருணாநிதி செய்த நன்மைகளை எடுத்துக்காட்டும் விதமாக கலைஞரும் கதை வசனமும், கலைஞரும் பாடலாசிரியர்களும், கலைஞரும் இசையமைப்பாளர்களும், கலைஞரும் இயக்குநர்களும், கலைஞரும் திரைப்பட தயாரிப்பாளர்களும், கலைஞரும் திரையரங்கமும், கலைஞரும் திரைத்துறை பணியாளர்களும், கலைஞர் திரைத்துறைக்கு செய்த நன்மைகளும் அவை சார்ந்த தமிழர்களின் முன்னேற்றமும் தொடர்பான விடயங்களை உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் ‘கலைஞரும் சினிமாவும்’ என்ற நிகழ்வு நடத்தப்படவுள்ளது. 

இந்த திரை நிகழ்ச்சியில் தமிழ் திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கதை வசனகர்த்தாக்கள், திரையரங்க உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் என திரைத்துறையை சார்ந்த அனைத்து கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இந்த நிகழ்வு உலகத் தமிழர்கள் கண்டுகளிக்கும் விதமாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் தெரிவித்தார். 

கலைஞருக்கான இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டில் உள்ள தமிழ் திரைக்கலைஞர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47
news-image

“தீவா கரத்திற்கு வலிமை” தொழில் முயற்சியாண்மைத் ...

2024-02-21 11:12:56
news-image

'ஜின்னாஹ்வின் குறும்பாக்கள் 550' நூல் வெளியீடு

2024-02-20 13:27:36
news-image

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தின நிகழ்வும்...

2024-02-20 18:18:48
news-image

சுனந்தாஜியின் வருடாந்த பகவத்கீதை சொற்பொழிவு மார்ச்...

2024-02-20 11:14:10
news-image

சிலம்பம் கலையின் நடுவர்கள் நியமனம்

2024-02-20 13:31:10
news-image

தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' நாவலின் அறிமுக விழா

2024-02-19 17:50:52