கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்குளி பிரதேசத்திலுள்ள பொது இடத்தில் வைத்து குறித்த நால்வரும் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கஞ்சாப்பொதியை முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மட்டக்குளி பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.