புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியான பிரிவு வகுக்கப்படும் - அமைச்சர் மனுஷ நாணயக்கார

Published By: Digital Desk 3

29 Nov, 2023 | 04:46 PM
image

நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

1956 அம் ஆண்டு சிங்கள மொழி அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்த நாட்டு மக்கள் மத்தியில்  ஏற்பட்ட  பிளவுகள் காரணமாக  பல இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இவற்றுக்கு காரணம் நாட்டுக்கு ஏற்றபொருத்மான பிரஜைகள் உருவாக்கப்படாமையே. உலகத்தை பார்க்க முயலும் சிறு பிள்ளைகளுக்கான ஆரம்ப கல்வியை முன்னெடுக்கும் ஆரம்ப பள்ளிகள்  தேவையான வழிகாட்டலுடன் வழி நடத்தப்படுவது அவசியம். இதில் ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தான் அவர்கள் அனைவரும் கண்ணியத்துடன் கனிவான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும் அமைப்பை உருவாக்கி செயல்படுகிறோம். இதற்காக புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியான பிரிவு வகுக்கப்படும் என்று முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாட லில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மூன்று மாதங்களுக்குள் முறைசார துறையிலுள்ள அனைவருக்கும்  EPF . ETF முதலானவற்றை  எவ்வாறு வழங்குவது மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு கையளிக்கவுள்ளோம். இதற்கமைவாக இந்தத் திட்டத்தின் மூலம் உங்களைப்போன்ற 60 லட்சம் பேருக்கு  ETF, EPF  பெற முடியும். காப்புறுதி  அடிப்படையிலான சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்காக செயல்பட்டுவருகின்றோம்.

நம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. எனவே அந்த இலக்கை நோக்கிச் செல்ல, நாம் இந்த பிள்ளைகளை முன்னெடுக்க வேண்டும். இன்னும் 15, 20 வருடங்களில் இந்தக் பிள்ளைகள்  இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வருவார்கள். உங்களால்தான் இந்தக் பிள்ளைகள் வலிமையடைவர்களாகவும். நன்றாகச் சிந்திக்கும் ஆற்றலையும் பெறுவார்கள்.

நாட்டில் முறைசாரா தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 60 லட்சம் பேர் உரிய தொழில் அங்கீகாரம் இல்லாதவர்கள், உரிய தொழில் பாதுகாப்பு இல்லாதவர்கள். அதனால் அவர்களுக்கு தொழில் கௌரவத்தை அளிக்கவும், அவர்களின் தொழிலுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுமே “கரு சரு” திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான 'கரு சரு' என்ற வேலைத்திட்டத்திற்கு  பொது மக்ககளின் கருத்துக்களை கேட்டறிவிதற்கான தொடர் செயல் அமர்வின்  5 ஆவது அமர்வு இன்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.  

முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு  தொழில் கௌரவத்தை வழங்குவதற்கும் ,அவர்களின் தொழில் ரீதியிலான நலன்கள் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்ட போதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. இதனாலேயே இதற்கு வழிவகை செய்யும் பொருட்டு 'கரு சரு' (Garu Saru) திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

“இங்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான அமைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் மற்றும் கட்டிடக்கலைஞர்களுக்கு என  தனி அமைப்புக்கள் உண்டு. அரசாங்க  பாடசாலைபகளில்  கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசின் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் ,உங்கள் தொழிலின் தரத்தை தீர்மானிக்க வழி முறை இருக்கிறதா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் தொழிலின் தரத்தை பாதுகாக்க விரும்பினால், தொடர்புடைய தரங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இந்த தரநிலைகளை பராமரிக்க சரியான கட்டமைப்பு இருக்க வேண்டும். உங்களுக்கு அவ்வாறான ஒன்று இருக்கின்றதா? அவ்வாறான ஒன்று  இல்லை என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்கு   NVQ தர சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். அப்போது உங்களது தொழிலுக்கு தர நிலை ஏற்பட முடியும் . இதனை நாம் செய்வோம். கிராமத்தில் முன்பள்ளி ஆரம்பிக்க நினைத்த போது சில பிள்ளைகளை கூட்டி முன்பள்ளியை ஆரம்பித்த சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆரம்ப கல்வி என்பது நம் பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மேப்படுத்தும் இடம். அங்கு பிள்ளைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை என்றால், நம் நாட்டின் எதிர்காலம் தவறான வகையில்  கட்டமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிள்ளை பருவத்திலிருந்தே குழந்தையின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தை உளவியலை அறிந்தவகையில் , ஒரு பிள்ளையை எப்போதும் மிகவும் கூர்மையாக பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் நிலைகொள்ள வேண்டிய விடயங்கள் அவர்களது மனதில் பதியாமல்  போனால் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எமது கல்வி முறை  பரீட்சையை அடிப்படையாகக் கொண்டது, அதன் பிறகு தொழில் கிடைக்க வேண்டும் வேண்டும். அங்கே, டாக்டரோ, இன்ஜினியரோ என்பதைத் தவிர வேறு எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பிள்ளைகளே  உருவாக்கப்பட்டனர், இதே நடைமுறை எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்த நாட்டில் இடம்பெற்றது. நாடு வளர்ச்சியடையவில்லை என்று நாம் குற்றம் சாட்டுகின்றோம் எமது பிள்ளைகள் நாட்டில் ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்று நாம் கல்வி முறையை முன்னெடுக்கவில்லை. ஒரு நல்ல தொழில்முனைவோர், ஒரு நல்ல தயாரிப்பாளராக, சுயதொழில் தொடங்கி உலக தொழில் துறையில் முந்திச் செல்லும் கல்வியை நாம் முன்னெடுக்க தவறிவிட்டோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும் பேசப்படும் தொழில்நுட்பத் துறைக்கு பிள்ளைகளுக்கான அடிப்படையை முன்னெடுக்கும் ஒருவராக முன்பள்ளி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அடிப்படை அடித்தளத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எனவேதான் கல்வி முறையும் அதற்கு ஏற்றவகையில் மாற்றப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

முன்பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு மைதானத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதோடு, பாலர் பாடசாலையில் பல்வேறு செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் மனதைத் பரந்துபட்ட அறிவை நோக்கிய ஈட்டு செல்ல  பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். நாங்கள் அதை நன்றாகப் பார்த்தோம். முன்பள்ளி ஆசிரியர்கள் வண்ணத் தேர்வு மற்றும் எண் தேர்வு போன்ற செயல்பாடுகள் மூலம் பிள்ளைகளை  ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இட்டுச்செல் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் முதலாம் ஆண்டுக்குப் போனவுடனே பிள்ளை வேறு திசையை நோக்கி வழிநடத்தப்படுகின்றார்கள் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர்...

2025-01-15 12:04:54
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55
news-image

12-40 வயதுக்குட்ட 50 வீதமானோருக்கு மின்னஞ்சல்...

2025-01-15 11:58:19
news-image

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகளுக்கான...

2025-01-15 11:45:28
news-image

கட்டுநாயக்கவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-15 11:32:54
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-15 11:24:09
news-image

யாழ். நாகர்கோவில் கடற்பரப்பில் கையொதுங்கியுள்ள மிதவை

2025-01-15 11:38:24
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-01-15 11:15:00
news-image

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல்...

2025-01-15 11:17:41
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜைகள்...

2025-01-15 11:13:51
news-image

தொடங்கொடையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

2025-01-15 10:45:40