அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த விஜித ஹேரத்

Published By: Vishnu

29 Nov, 2023 | 07:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை போக்குவரத்து சேவைக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய குறைப்பு மேற்கொண்டே அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த வருடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு திறைசேரியால் வழங்கும் நிதி குறைப்பு செய்தே அரச ஊழியர்களின் வாழ்க்கைச்செலவை 10ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு செய்திருக்கிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் சில பஸ்கள் இரவு நேர சேவைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பயணிகள் ஒருசிலர் இருந்தாலும் குறித்த நேரத்தில் அந்த பஸ் அந்த வீதியினூடாக பயணிக்கும். அதற்காக அரசாங்கம் போக்குவரத்து சபைக்கு 6 பில்லியன் ரூபா கடந்த வருடம் ஒதுக்கி இருந்தது.

ஆனால் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த இரவு நேர பஸ் சேவைக்காக ஒதுக்கப்பட்ட 6 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் இரவு நேர பஸ் சேவைகள் இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அனுராதபுரத்தில் இருந்து விலச்சிக்கு இரவு நேரம் பயணிக்கும் பஸ் சேவை நிறுத்தப்பட்டால் பயணிகள் முச்சக்கர வண்டியில் அனுராதபுரத்தில் இருந்து விலச்சிக்கு செல்ல 3ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. அல்லது அந்த பயணிகள்  அனுராதபுர பஸ் நிலையத்தில் இரவை கழித்துவிட்டு மறுநாளே செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேபோன்று இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டிகளில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு மூலம் நூற்றுக்கு 7 வீதமே அறவிடப்படுகிறது. இதற்காக போக்குவரத்து சபைக்கு 2பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் அந்த 2பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அடுத்த வருடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்படும் அல்லது பருவச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களே பாதிக்கப்படப்போகின்றனர்.

அத்துடன் ரயில் சேவைகள் உரிய நேரத்துக்கு இடம்பெறுவதில்லை. அதேபோன்று நாள் ஒன்றுக்கு 390 பயண வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய ரயில் போக்குவரத்து தற்போது 300 பயண வாரங்களே இடம்பெறுகின்றன.

இதன்காரணமாக காரியாலயங்களுக்கு செல்பவர்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை குறைவடைவதற்கு காரணம், சரியான முகாமைத்துவம் இல்லாமை மற்றும் அங்கு காணப்படும்  ஊழியர்களுக்கான வெற்றிடமாகும்.

அத்துடன் ஊழியர்களுக்கு மேவதிக நேர கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.  ரயில் திணைக்களத்தில் பயிற்றப்பட்ட தொழிநுட்ப ஊழியர்கள் 6ஆயிரம் பேருக்கு வெற்றிடம் காணப்படுகிறது. 

அதேபோன்று வேறு துறைகளிலும் ஊழியர் வெற்றிடம் காணப்படுகிறது. இதனால்தான் இருக்கும் ஊழியர்கள் மேலதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்துடன் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 ரயில் இன்ஜின்களில் 5 பயன்படுத்த முடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இன்ஜின்76 கோடி ரூபா அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டிருக்கிறது.

குறித்த இன்ஜின் எமது ரயில் வண்டிகளுக்கு பொருத்த முடியாது என்பதாலே இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறன. முறையாக தொழிநுட்  வழிகாட்டல் இல்லாமல் இவை கொண்டுவரப்பட்டமையே இதற்கு காரணமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12