உலகின் மிகவும் "சோகமான" யானை என பெயரிடப்பட்ட இலங்கை யானை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள மிருக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது. குறித்த யானை மணிலா மிருக்காட்சாலையில் இருந்த ஒரே ஒரு யானை என்பதால் தனது வாழ்நாளை தனிமையில் வாழ்ந்துள்ளது.
விஸ்வ மலி என பெரியடப்பட்ட குறித்த யானை பிறந்து 11 மாதங்களில் 1977 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி இமெல்டா மார்கோஸுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் யானை மணிலா நகரத்தின் பராமரிப்பின் கீழ் வந்தது. இதேவளை, 1977 ஆம் ஆண்டு ஷிவா என்ற மற்றொரு யானையும் மிருக்காட்சாலையில் இருந்தது. அந்த யானை 1990 ஆம் ஆண்டு உயிரிழந்தது.
அன்றிலிருந்து மலி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே யானையாக தனிமையில் வாழ்ந்து வந்தது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் மணிலா மிருக்காட்சிசாலை குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் இடமாக செயல்பட்டது. அச்சமயம் மலி யானை குழந்தைகளை மகிழ்வித்தது.
இந்நிலையில், செவ்வாயன்று மலியின் மரணம் குறித்து மணிலா மேயர் ஹனி லகுனாவால் பேஸ்புக்கில் அறிவித்தார். அவர் மலியைப் பார்க்க மிருகக்காட்சிசாலைக்குச் சென்றது அவரது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
யானையை பிரேத பரிசோதனையில் சில உறுப்புகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தும், பெருநாடியில் அடைப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸிற்கான ஒரு விஜயத்தின் போது நாட்டிற்கு மலியை கொண்டுவந்த அதே இலங்கை அரசாங்கமே புதிய யானையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக மணிலா மேயர் ஹனி லகுனா பிலிப்பினோவில் புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேவேளை, யானையின் எச்சங்களை பாதுகாத்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட பிலிப்பைன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM