கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல் பீடத்தின் ‘Back to Faculty’ கொண்டாட்டங்களுக்கு வெள்ளி அனுசரணையாளராக CDB இணைவு  

Published By: Vishnu

29 Nov, 2023 | 04:46 PM
image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Back to Faculty’ நிகழ்வின் வெள்ளி அனுசரணையாளராக CDB இணைந்திருந்தது.

கடந்த 42 வருட காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு மீண்டும் ஒன்றுகூடி, தமது நட்பை மீட்டுப்பார்ப்பதற்கு கிடைத்திருந்த இந்த வாய்ப்புக்கு CDB இன் அனுசரணை பெரிதும் உதவியிருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் எதிர்காலத்தில் தாம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகள் தொடர்பில் அங்கத்தவர்களுக்கு கலந்துரையாடுவதற்கும் இந்த நிகழ்வு வாய்ப்பளித்திருந்தது. முக்கியமாக, இந்நிகழ்விலிருந்து பெறப்பட்ட நிதி, இரு முக்கிய காரியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியளவில் பின்தங்கியுள்ள பட்டம் பயிலுநர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி, அவர்களின் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளிப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய உட்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும். 

நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, CDB அனுசரணை காசோலை, பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதன் போது (இடமிருந்து) CDB சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மை சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் மெவன் ரணசிங்க, CDB சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மை உதவி பொது முகாமையாளர் சரித வர்ணகுலசூரிய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரட்ன, முகாமைத்துவ மற்றும் நிதியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். எம்.பி.பி. தர்மதாச மற்றும் வியாபார பொருளியல் பிரிவு தலைமை அதிகாரி பேராசிரியர் எச்.எம். நிஹால் ஹென்நாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்