கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு உறுதிப்பத்திரம் : முற்றிலும் பொய்யானது என்கிறார் எஸ்.எம்.மரிக்கார்

Published By: Vishnu

29 Nov, 2023 | 04:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது.

ஏனெனில் கொழும்பில் 14,512 குடியிருப்புகள் மாத்திரமே உள்ளன. சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோருக்காகவே இந்த பொய்யான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

கொழும்பு மாவட்ட மக்களுக்கு குடியிருப்பு உறுதிப்பத்திரம் வழங்கினால் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும்  நகர அபிவிருத்தி  மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய  அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல கற்பனை கதைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு மாவட்டத்தில்  நகர அபிவிருத்தி அதிகார சபையின்  நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் உள்ள 50 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் பொய்யானது.தனது சகாக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியல் வாக்குறுதி.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் இல்லை.14512 வீடுகள் மாத்திரமே உள்ளன.மீதுன்செவன குடியிருப்புத் திட்டத்தில் 500 குடியிருப்புகளும்,லக்முது செவன குடியிருப்பு திட்டத்தில் 118 குடியிருப்புகளும்,மெதத்செவன குடியிருப்புத் திட்டத்தில் 430 குடியிருப்புகளும் உள்ளடங்களாக 24 குடியிருப்பு செயற்திட்டத்தில் 14512 குடியிருப்புகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ வழங்கியுள்ள குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்க முடியாது,ஏனெனில் உரிய காணிகளுக்கு முதல் உரிமையாளர் இல்லாத நிலையில் உறுதிப்பத்திரம் வழங்க முடியாது. இதுவே உண்மை.50 ஆயிரம் பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டவுடன் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு தொகுதிக்கு சென்றேன். அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 30 வருடகாலமாக வாடகை மற்றும் வரி செலுத்தி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஒருசிலர் இரண்டாம் தர உரிமையாளர்களாக உள்ளார்கள்.

புதிய குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் கொழும்பு மாவட்டத்தில் பெருமளவான வீட்டுதொகுதி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே ஜனாதிபதியின்  வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. கற்பனை கதைகளை அழகாக குறிப்பிடுவதில் ஜனாதிபதி திறமையானவர் என்பதை பொதுஜன பெரமுனவினர் அறியாமல் இருக்கலாம், நாங்கள் நன்கு அறிவோம்.

கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 14,512 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்ட 12,360 பேருக்கு குடியிருப்பு  உறுதிப்பத்திரம் வழங்குவதாக இருந்தால் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எம்மை காட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கடன்பட்டுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை தொடர்ந்து அவர் ஏமாற்றினார்.அதற்கான பாடத்தை கொழும்பு மாவட்ட மக்கள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கற்பித்தார்கள்.

 மக்களால் புறக்கணிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு 50  ஆயிரம் பேருக்கு குடியிருப்பு உரிமை வழங்குவதாக பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.சாகல ரத்நாயக்க,ரவி கருணாநாயக்க ஆகியோர் முடிந்தால் எம்முடன் போட்டி போட்டு தேர்தலில் வெற்றியடையட்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39