இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி ரூபா மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன் போது புதன்கிழமை (29) அதிகாலை 4 மணியளவில் ஒரு நாட்டுப் படகு சந்தேகத்திற்கிடமாக இந்தியா பாம்பன் அருகே நின்றது.
அதனையடுத்து படத்திலிருந்து நான்கு பேரும் கரையை நோக்கி வரும் போது மறைந்து இருந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்ற போது தாங்கள் கொண்டு வந்த பொதியை படகில் விட்டு கடலில் குதித்து தப்பினார்.
பின்னர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகை சோதனை செய்தபோது அதில் சுமார் 3.5 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப் படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து சுங்கத்துறை மற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களை தீவிரமாக தேடி வருவதோடு, தொடர்ந்து தப்பியோடியவர்கள் மற்றும் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி 20 இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்த படகை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதிகாலையில் பாம்பன் அருகே கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM