கலவரத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண்கள் உட்பட 11 பேர் கூரிய வாள்களுடன் கைது

29 Nov, 2023 | 03:27 PM
image

கொழும்பு - பேலியகொடை பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரு குழுக்களின் பெண்கள் உட்பட  11 சந்தேக நபர்கள் கூரிய வாளுடன் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி பிரதேசத்தை சேர்ந்த 26, 46 , மற்றும் 47 வயதுடைய 3 பெண்களும் 23 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 8 ஆண்களும் ஆவர்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது சந்தேக நபர்களிடமிருந்து  4 கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு குழுக்களில் உள்ள  7 பேர் பல்வேறு குற்றங்களில் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிலர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குழு அடிக்கடி இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கலவரத்தில் ஈடுபடுவதாகவும் இவர்கள் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் கீழ் செயற்படுபவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24