வவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடருகின்றது.

கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.