மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 147 கோடி) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது. அம்புலுவாவ உயிர் பல்வகைமை மையத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
சீனா மெஷின்-பில்டிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் முதல் கேபிள் கார் நிர்மாணிக்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
அம்புலுவாவ 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் புவனேகபாகு மன்னனால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை மற்றும் மலைத்தொடராகும். பல்லுயிர் வளங்களைக் கொண்ட இயற்கை மையமாக திகழும் இந்த மலைச்சிகரம் 365 அடி உயரத்திலும் கம்பளை நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மலைச்சிகரத்தில் அனைத்து மதஸ்தலங்களும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM