மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று புதன்கிழமை (29) காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை வேட்டைப் பொறியில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
6 அடி நீளமான ஆண் சிறுத்தையே சடலமாக மீட்கப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே இது சிக்கியுள்ளது.
சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தோட்டத்தில் சில மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களையும் இந்தச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM