மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை செய்ய முயன்ற கணவனுக்கு விளக்கமறியல் !

29 Nov, 2023 | 06:45 PM
image

மனைவியை தீயிட்டு எரிக்க முயற்சித்தமை மற்றும் தனது மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

அம்பலாங்கொட ரண்தொம்பே  பகுதியைச் சேர்ந்த தினுஷ நுவன் கொடிதுவக்கு என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் மனைவியின் சகோதரரான மைத்துனரை குத்திக் கொலைசெய்த வழக்கு விசாரணை பலப்பிட்டிய நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மனைவியின் தம்பியை கொலை செய்தமை தொடர்பில் மனைவியின் தாயார் சாட்சியம் வழங்கக்கூடாதென மிரட்டியே, மனைவியை அறையொன்றில் வைத்து, நாற்காலியால் கட்டி வைத்து, தலையணை, போர்வைகள் போன்றவற்றால் மூடிவைத்து தீ மூட்ட குறித்த நபர் தயார் செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களினால் வழங்கிய சாட்சியங்கள் உறுதியானதையடுத்து அவரது மனைவியைக் கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59
news-image

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் ஆசிய, பசுபிக்...

2024-03-01 19:01:51
news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05