பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் அவர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் பேசும் நல்லிணக்கம், சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதி போன்றவற்றுக்கு எதிராக செயற்படுகிறார் என்பதை அம்பலப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வதற்காக இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை காலையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சாணக்கியன்,
நாங்கள் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதற்கோ அல்லது ஜனாதிபதியுடன் பேசுவதற்கோ உத்தியோகபூர்வ தகவல் தெரிந்துகொள்வதற்காகவே நான் கைதானவர்களை பார்வையிட இங்கு வந்தேன்.
அந்த நிகழ்வில் கைது செய்யப்பட்டவர்கள் 4 பேர் அதில் ஒலிபெருக்கி, மின்பிறப்பாக்கி உதவியமைக்கு இருவரையும் ஏற்பாட்டாளர் என கூறப்படும் ஒருவரையும் மற்றொருவர் பொலிஸாருக்கு சத்தமாக பேசினார் என்ற காரணத்துக்காகவும் அவர்கள் நால்வரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.
மேலும் மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை பயன்படுத்தியது குற்றம், ஆகவே அவர்களை நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என சர்வதேசத்திடம் பல வாக்குறுதிகளை இலங்கை அரசு கொடுத்துள்ளது.
நாங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என நாடு முழுவது கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டிருந்தோம். அவ்வேளையில் அனைத்து அரசியல் கட்சியும் இன, மத, மொழி பேதமில்லாமல் இலங்கை வாழ் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆகவே இலங்கை அரசு சர்வதேசத்திடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நால்வரை கைது செய்துள்ளார்கள். அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக மேலும் சிலரை வவுணதீவு பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கேக் வெட்டினது கூட இந்த நாட்டில் குற்றம் அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது என்பதை நான் பொலிஸ் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸிடம் நீங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பீர்கள் என்றால் அதன் விளைவுகளை எடுத்து கூறினேன். ஜனாதிபதி செயலகத்திடமும் இதை அறிவித்திருக்கிறேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் அவர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அவர் பேசும் நல்லிணக்கம், அளித்த சர்வதேச வாக்குறுதி போன்றவற்றுக்கு எதிராக செயற்படுகிறார் என்பதை அம்பலப்படுத்துவோம்.
சிலர் இராணுவத்துடன் இனைந்து சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி தங்களுடைய நிகழ்வுகளை நாடாத்து பொழுது எந்த தடையும் இல்லை.
இன்னும் சில காலத்தில் ஆலயங்களில் கூட சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி ஆலய நிகழ்வுகளைக் கூட நடாத்தமுடியாமல் போகும் அதுவும் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு குற்றம் போல் சொல்லுவார்கள் என்றார்.
மேலும் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களுகாக உழைக்கிறவர்கள் ஆகவே இவர்களும் விடுதலையாகும் வரை அவர்கள் குடுதம்பத்தாருடனும் ஆதரவாக நின்று விடுதலைக்காக பாடுபடுவோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM