லோகேஷின் அடுத்த அதிரடி!

29 Nov, 2023 | 04:35 PM
image

தற்போதைய ‘மோஸ்ட் வோன்டட்’ இயக்குனரான லோகேஷ் கனகராஜ், படத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். ‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் அவர், தனது முதல் தயாரிப்பு பற்றி அறிவித்திருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ‘உறியடி’ படத்தை இயக்கி, நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த விஜயகுமார். 

இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார், ‘உறியடி’யில் விஜயகுமாருடன் இணை இயக்குனராகப் பணியாற்றிய அப்பாஸ் ஏ ரஹ்மத். இசையமைப்பு, கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு லியோன் பிரிட்டோ. படக்கலவை கிருபாகரன்.

இந்தப் படம், இளைஞர்களைக் கவரும் விதமாக, சண்டைக் காட்சிகள் நிறைந்த அதேநேரம் முழுக் குடும்பத்துக்கும் ஏற்ற சுவாரசியமான படமாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதற்பார்வை, இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகவிருக்கிறது என்று, ஜி ஸ்குவாட்டின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right