விடு­தலைப் புலி கள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் துப்­பாக்கி ரவை­களை தனது பல­மாக கொண்­டி­ருந்தார். ஆனால் நான் வாக்­குச்­சீட்­டுக்­களை மாத்­தி­ரமே பல­மா­கக்கொண்டு அர­சியல் செய்­கின்றேன் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் பொருட்­டான செயற்­பா­டு­களின் போது நான் ஒரு தனித்­து­வ­மான பிர­தி­நி­தி­யா­கவே செயற்­ப­டுவேன். மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அல்­லது எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கீழ் செயற்­ப­டப்­போ­வ­தில்லை எனவும் அவர்  சுட்­டிக்­காட்­டினார்.

கொட்­டஞ்­சேனை இந்து மகா வித்­தி­யா­ல­யத்தில்  இடம்­பெற்ற மாண­வர்­க­ளுக்­காக அப்­பி­யாச புத்­த­கங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜன­நா­யக மக்கள் முன்­னணி சார்­பிலும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பிலும் கொழும்பில் பல உத­வித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு காரணம் இன்று எமக்கு இங்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள குறைந்­த­பட்ச பல­மாகும். பல­மில்­லா­விட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடி­யாது வாய்­பேச்­சுக்கள் மாத்­தி­ரமே எமக்கு கிடைக்கும்.

அதனால் சக­ல­துக்கும் அடிப்­ப­டை­யாக அர­சி்யல் பலமே அமை­கி­றது. அர­சியல் பலம் எவ்­வாறு வரு­கின்­றது என பார்க்­கின்ற போது தமீ­ழீழ விடு­தலை புலிகள் இருந்த காலத்தில் துப்­பாகி ரவை­களில் பிர­பா­க­ரனின் பலம் இருந்­தது. ஆனால் எனது  பலம் வாக்­கு­சீட்­டாகும்  வாக்­கு­சீட்டை இங்­குள்­ள­வர்கள் முறை­யாக பயன்­டுத்­தினால் எமக்­கான பலம் கிடைக்கும்.

கடந்த காலங்­களில் நீங்கள் வாக்­கு­களை முறை­யாக பயன்­ப­டுத்­த­வில்லை. அறி­வுள்­ள­வர்கள் உணர்­வுள்­ள­வர்கள்இ சமூக அக்­கறை உள்­ள­வர்கள்இ உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளிலும் பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளிலும் தமது வாக்­கு­களை சரி­யாகப் பயன்­ப­டுத்­தி­ய­மைனால் தான் நாம் இந்த அள­விற்­கேனும் பல­மாக இருக்­கின்றோம்.

தேர்தல் வரு­கின்ற போது கண்­களை மூடிக்­கொண்­டேனும் வாக்­குளை சரி­யாக அளிக்க வேண்டும். காரணம் நமக்கு நாமே வாக்­க­ளிக்க வேண்டும். தற்­போது இவ்­வி­டத்தில் உள்­ள­வர்கள் கூட தேர்தல் காலத்தில் நீங்கள் எமக்­காக என்ன செய்­தீர்கள் என்­றுதான் கேட்­பார்கள். அவர்­க­ளி­டத்தில் வாக்­க­ளிக்­கா­தீர்கள்  என்று கூறி­வந்­தி­ருக்­கிறேன்.

கொலன்­னாவை பகு­தியில் தமிழ் நாடு என்று ஒரு இட­முள்­ளது. அங்கு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்­கின்­றனர். ஒரு காலத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் மக்­களின் வீடு­களை தகர்க்க ‡ரக­சி­ய­மாக நீதி­மன்ற அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொண்டு வந்­தனர். அங்­குள்ள முஸ்லீம் பள்­ளி­வாசல் ஒன்­றிணை உடைத்தன் பின்­னரே எனக்கு தகவல் கிடைத்­தது. அங்கு நான் சென்று பார்­தத போது பொலிஸார் யுத்தம் செய்­வது போன்று குவிந்து நின்­றார்கள். 

அக்­கா­லத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் என்றால் ஆயு­தத்­து­ட­னேயே பொலிஸார் வரு­வார்கள். எவ்­வா­றா­யினும் நான் அவ்­வி­டத்­தினை உடைக்­க­வி­ட­வில்லை. நீதி மன்ற ஆணை­யைக்­காட்டி உடைக்க முற்­பட்­டனர் சகல செயற்­பா­டு­களும் நிறுத்­தப்­பட்­டன.

ஆனாலும் நீதி­மன்­றத்தின் ஆணையைக் காரணம் காண்­பித்து இரண்­டரை வரு­டங்கள் என­மீ­தான வழக்கு இடம்­பெற்­றது. ஆரம்ப காலத்தில் வழக்கு இடம்­பெற்ற போது என்னை கட­வு­ளென்றும் தலை­வ­ரெண்டும் நீதி­மன்றம் வரையில் வந்து பாரட்டி வாழ்க என்ற கோசம் எழுப்­பி­ய­வர்கள் இன்று வரு­வ­தில்லை.

எல்­லோரும் மறந்­து­விட்­டனர். ஆனால் வழக்கில் எனக்கு எதி­ராக தீர்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்தால் நான் சிறைக்குச் சென்­றி­ருப்பேன். அதற்கு பின்பு கொலன்­னாவ சென்று வாக்கு கேட்­கையில் கடந்த வாரம் ஹிரு­ணிகா இ சும­தி­பால ஆகியோர் வந்­தி­ருந்­தார்கள்.  அவர்கள் வீட்டு கூரை­க­ளுக்­கான தக­டு­களை தந்­தார்கள் நீங்கள் என்ன தந்­தீர்கள் என கேட்­கின்­றார்கள்.

தக­டு­களை பொருத்­து­வ­தற்­கான வீடு­க­ளையே நான் தான் காப்­பாற்றிக் கொடுத்தேன் என்­பதை மறந்­து­விட்டு பேசு­கின்­றார்கள். அதனால் வாக்கு வேண்டாம் என்றே கூறி­விட்டு திரும்­பி­விட்டேன். கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் கொழும்பில் நட­மாட முடி­யா­தி­ருந்த போதும் கூட கூட்­டணி மற்றும் கூட்­ட­மைப்பு உட்­பட சக­லரும் ஒடி ஒழிந்­துக்­கொண்­டார்கள்.

ஆனால் அந்த நேரத்­திலும் நாம் எவரும் இல்­லாத நெருக்­க­டி­யான சந்­தர்ப்­ப­திலும் இருந்­துள்ளோம். இன்று முகப்­புத்­த­கத்­திலும் அரசர் குல பரம்­ப­ரைகள் போன்று இன்று வீரம் பேச பலர் இருக்­கின்­றார்கள். பிரச்­சினை என்­கின்ற போது மனோ கணேசன் மாத்­தி­ரமே வரு­கிறேன்.

அதேபோல் நான் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சியி்ல் இணைந்­தி­ருப்­பதால் நான் ஐக்­கிய தேசிய கட்­சி­யியை சேர்ந்­தவன் என்று கரு­தி­வி­டக்­கூ­டாது. எங்கு சேர்ந்­தாலும் நாம் தனித்­து­வ­மா­கவே இருக்­கின்றோம். அதனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது எதிர்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனும் எனக்கு தலைவர் இல்லை எனக்கு நானே தலைவன்.

மலை­ய­கத்­திலும் வடக்கு கிழக்­கிலும் கொழும்­பிலும் வாழ்­கின்ற தமிழ் மக்கள் பற்றி எனக்கும் நன்­றாக தெரியும். மூன்று மாத்­திற்கு முன்­பாக ஐக்­கிய நாடுகள் சபை­யி­லி­ருந்து வந்த சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான பிர­தி­நி­தி­யி­டத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழ்­கின்ற தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அறி­வு­றுத்­தி­யி­ருந்தோம்.

தற்­போது இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் அதற்­கான பலன் தெரி­கின்­றது. இவ்­வாறு எமது பிரச்­சினை சர்­வ­தேசம் அறிந்­துக்­கொள்­கின்­றது. ஆனால் அதற்கு முன்னர் வடக்கு கிழக்­கிற்கு வெளியில் தமிழ் மக்­களே இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர் இருந்­துள்ளார்.

இன்று அவர் எமது பிரச்­சி­னையை உலக அரங்கில் அரங்­கேற்­றி­யுள்­ள­மையில் அது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யாக அமை­கின்­றது அது மனோ கணே­சனின் வெற்­றி­யு­மாகும். 

தமிழ் மொழி­யு­ரிமை பிரச்­சி­னைக்கு தீர்வு

எனது அமைச்­சுக்கு தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்ட நண்பர் ஒருவர் முறைப்­பா­டொன்­றினை பதிவு செய்ய முற்­பட்ட போது அங்கு தமிழ் மொழியில் முறைப்­பாட்­டினை ஏற்­ப­தற்­கான எவரும் இருக்­க­வில்லை என்று அந்த பிரச்­சி­னையை பூதா­க­ர­மாக்­கி­யுள்ளார்.

பத்­தி­ரி­கை­களும் அது­கு­றித்து பேசு­கின்­றன. ஆனால் எனக்கு மூன்று மொழி­களும் நன்கு தெரியும். அதனால் இன்று மொழி­யு­ரிமை குறித்த கருத்­த­தா­டல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளேன். ஆனால் அர­சாங்­கத்தில் நிதி நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது எனவே வெளி­நாட்டு உத­வி­களை நாம் கோரி­யுள்ளோம் ஜூன் மாத்­திலே தான் அந்த பணம் எமக்கு கிடைக்கும்.

அதன் பின்னர் சகல புதிய மொழி­யு­ரி­மைக்­கான திட்­டங்­களும் அமு­லுக்கு வரும் எனவே தற்­போது எமக்­குள்ள நிதித்­தே­வையை விமர்­சிக்­கின்­ற­வர்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும்இ உங்­களால் முடிந்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் எனது அமைச்சுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து தரச்சொல்லி செய்திகளை வெளிப்படுத்துங்கள்.

அதனை விடுத்து தமிழ் அமைச்சர் கிடைத்துவிட்டதை வாய்பாக பயன்படுத்தி கடுமையாக விமர்சிக்காதீர்கள் கோத்தபயவை பார்த்துவிட்ட நான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதனால் உங்களுக்கும் முதுகெலும்பிருந்தால் ஜனாதிபதிக்கு எனது அமைச்சுக்கு பணம் தர கூறுங்கள்  அரசாங்கத்தில் இடம்பெறும் கொள்ளையடிப்புகளை தவிர்த்தாவது எனது அமைச்சுக்கான நிதியை பெற்றுத்தர கூறுங்கள். எவ்வாறிருப்பினம் வெகு விரைவில் மொழியுரிமை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.