கொடி அசுரர்கள் என்று சில அசுரர்கள் மக்களுக்கு கடும் தீங்கு விளைவித்து வந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே, ‘ஒரு பெண்ணின் கருவில் துளிர்க்காத கன்னிப் பெண்ணால்தான் மரணம்' என்று சாபம் விழுந்திருந்தது. தங்களது அசுர பலத்துக்கு முன், கன்னியால் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பில், அடாத செயல்கள் பலவற்றையும் தயங்காமல் செய்து வந்தனர் இந்த அசுரர்கள்.
அவர்களின் ஆர்ப்பரிப்பு அதிகரிக்கவே, அவர்களை நிர்மூலம் செய்ய நினைத்தாள் அன்னை பராசக்தி. அவர்கள் பெற்ற சாபத்துக்கு இணங்க, தனது ஏழு வித சக்திகளையும் ஏழு கன்னியராக மாற்றி, அந்தக் கொடி அசுரர்களைப் பூண்டோடு அழித்தாள் அன்னை பராசக்தி.
அதாவது, பிரம்மாவின் சக்திரூபமான பிராமி, மகேஸ்வரரின் சக்தி ரூபமான மகேஸ்வரி, குமரனின் சக்தியான கௌமாரி, விஷ்ணு சக்தியாகிய வைஷ்ணவி, வராக உன்மத்த வைரவரின் சக்தி மூலமான வாராகி, இந்திராணி எனப்படும் இந்திரனின் சக்தி மற்றும் துர்க்கா – லக்ஷ்மி இணை சக்தியான சாமுண்டி என்ற ஏழு சக்திகளையும் ஏழு கன்னியராக மாற்றியே இந்த கொடி அசுர வதம் நிகழ்ந்தது.
அதன் பின்னர், ஏழு சக்தியரும் ஏழு கன்னியராகவே – சப்த கன்னியராகவே – மக்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினர். அதுவே, சப்த கன்னியர் வழிபாடாக மாறிற்று. இது, ஆதி முதல் இருந்த வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது.
நகரமயமாதல் அதிகரித்துவிட்டதால், சப்த கன்னியர் பற்றியும் அவர்கள் மீதான வழிபாடு பற்றியும் பெரிதும் தகவல்கள் கிடைப்பதில்லை. ஆனால், கிராமங்களில் இந்த வழிபாடு இன்னும் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, தமிழக கிராமங்கள் பலவற்றிலும் இந்த சப்த கன்னியரோ அல்லது அவர்களுள் ஓரிருவரோ, கிராம தேவதைகளாக அல்லது வன தேவதைகளாக வழிபடப்படுகிறார்கள். சில பகுதிகளில் இவர்களை சப்த மாதாக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
- சித்தர் பாலகிருஷ்ண சுவாமிகள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM