ஹமாஸ் அமைப்பிடமிருந்து வெளிவரும் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிடமிருந்து வரும் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் என 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இஸ்ரேலிய காசா மோதல்களை எவ்வாறு பார்க்கவேண்டடும் என்பது குறித்து 270 பத்திரிகையாளர்கள் தங்கள் சகாக்களுக்கும் அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கும் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஊடகநிறுவனங்களின் செய்தியாளர்கள் ஹமாஸின் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் அதே அளவு சந்தேக மனப்பான்மையை இஸ்ரேலின் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளனர்
.
ஹமாஸின் தகவல்கள் குறித்து பயன்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கும் பயன்படுத்துங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மோதலில் இஸ்ரேலிய அரசாங்கமும் ஒரு பகுதி அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்பதற்கான அதிகளவு ஆதாரங்கள் வெளியாகின்றன என தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் பிழையான தவறான தகவல்களை பகிர்கின்றது என்பதற்கான பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்களும் வரலாறுகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் தகவல்களை உண்மையை ஆராயமல் ஒருபோதும் வெளியிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்கள் ஒருபத்திரிகையாளர்களாக இது எங்களின் அடிப்படை கடமை எனவும்தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் பேரழிவை ஏற்படுத்தும் குண்டுவீச்சும் காசாவில் ஊடகங்களை தடுத்துள்ளமையும் முன்னொருபோதும் இல்லாத வகையில் பத்திரிகை சுதந்திரத்திற்கும் செய்தி சேகரிப்பதற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என 270 பத்திரிகையாளர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிருபர்கள் ஆசிரியர்கள் புகைப்படப்பிடிப்பாளர்கள் ஏனைய பணியாளர்கள் என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களும் அவர்களது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை இலக்குவைப்பது ஜெனீவா பிரகடனத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் அதிகாரமுள்ளவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதும் உண்மையையும் முழு சூழமைவையும் பொதுமக்களிற்கு தெரிவிப்பதும் அரசியல் அச்சுறுத்தல் இன்றி அதனை செய்வதும் எங்கள் கடமை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM