இந்தியாவில் உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில் ஈடுப்பட்ட அர்னால்ட் டிக்ஸ் யார்?

Published By: Digital Desk 3

29 Nov, 2023 | 11:40 AM
image

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமை (28) மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். 

அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்,

பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராவார். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 

மேலும், நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும் டிக்ஸ் இருந்து வருகிறார். இந்த அமைப்பு நிலத்தடி பணிகள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கலான அபாயங்களை கண்டறிந்து தீர்க்கும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவாகும்.

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு உதவ, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் கடந்த நவம்பர் 20ஆம் திகதி அழைக்கப்பட்டார். நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய டிக்ஸ், “ஆரம்பத்தில், இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” என்றார்.

அவர் சொன்னது போலவே,நேற்று செவ்வாய்க்கிழமை  41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

"இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. அவுஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தமைக்கு பெருமைப்படுகிறேன்" என அவுஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்

சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன் அர்னால்ட் டிக்ஸை தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32