வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக கொடுங்கல் வாங்கலில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக் கொண்டவர் பணம் வழங்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே மரணமடைந்தவராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM