மனதைக் குவித்தால் உடலை ஆளலாம்!

28 Nov, 2023 | 05:27 PM
image

பஞ்சபூதங்களால் ஆனதே இந்த மனித உடல். எனவே, இந்த உறுப்புகளின் ஒவ்வொரு பகுதியும் பஞ்சபூதங்களின் கலவையாலேயே ஆளப்படுகின்றன. மண்ணின் ஆதிக்கம் ஒரு பகுதியில் அதிகம் என்றால், மற்றொரு பகுதியில் தீயின் ஆதிக்கமோ, வாயுவின் ஆதிக்கமோ நிறைந்திருக்கும். இருக்கட்டும்.

உடலின் உயிர்மூச்சாகிய ஆன்மா, குண்டலினியை அடைய வேண்டும். இதற்கு, ஆன்மாவானது முக்கியமான ஆறு வாசல்களைக் கடந்து செல்லவேண்டும். இவ்வாசல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்கரம் இருக்கிறது. பாலுணர்வுப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் மூலாதாரமும், தொப்புள் அருகே உள்ள மணிபூரகமும் இதயத்துக்கு அருகில் உள்ள அனாகதமும் கழுத்துக்கு அருகில் உள்ள விசுத்தியும் புருவ மையத்தில் உள்ள ஆக்ஞாவுமே இந்த ஆறு சக்கரங்களுமாகும். இவை சுருக்கமாக ‘ஷட் சக்கரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இவை பிரம்ம நாடியுடன் தொடர்பு பட்டவை.

இந்த ஆறு சக்கரங்களிலும் பலவகையான தெய்வீக சக்திகள் உள்ளன. இவை மீது மனதை நிறுத்தி தியானிக்கும்போது, அச்சக்கரங்களில் தோன்றும் புதுமையான அனுபவத்தை உணரலாம். ஞானியர் இந்தச் சக்கரங்களைக் கண்ணால் காண முடியும் என்றாலும் ஆரம்பத்தில், தீவிரமான தியான நிலையில் இவற்றை அனுபவித்து அறியவே முடியும்.

ஒரு ஆறு பெருக்கெடுத்து ஓடும்போது, நீர்ச்சுழிகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு இணையாகவே, இந்த ஆறு சக்கரங்களிலும் தியானிக்கும்போது, அங்கு மிக மிக நுணுக்கமான பிராண வாயு சுழற்சி ஏற்படும். அதிலும் குறிப்பாக, முக்கோணம், அறுகோணம், வட்டம், லிங்கம் போன்ற வடிவிலேயே இந்தச் சுழற்சிகள் ஏற்படும்.

அண்டவெளியில் பிரபஞ்சத்தில் உள்ள மின்காந்த சக்திக்கும் மனித உடலின் ஜீவகாந்த சக்திக்கும் தொடர்பு உண்டு. நாம் உடல் அல்லது உள ரீதியாக இயங்கும்போது இந்த ஜீவகாந்த சக்தியை இழக்கிறோம். அப்படியானால், அது எவ்வாறு மீள் நிரப்பப்படுகிறது? மேலே குறிப்பிட்டது போல், இயற்கையாகவே நம்மைச் சுற்றிலும் உள்ள பிரபஞ்சத்தின் மின்காந்த மண்டலத்தில் இருக்கும் சக்தியின் மூலமே நிரப்பப்படுகிறது. இந்த, பிரபஞ்ச சக்தியை நம் உடலுக்குள் ஈர்த்துத் தரும் வேலையைச் செய்வது இந்தச் சக்கரங்கள்தாம். இந்தச் சுழற்சியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் – அதாவது, இந்த சக்தி ஓட்டம் ஏதோ ஒரு வகையில் குறைந்தால் – நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இந்தச் சக்கரங்களின் வாசல்களைத் திறப்பதற்கு தியானம் ஒன்றே வழி. சூரிய ஒளியை குவிவாடி ஒன்றின் துணையுடன் ஒரே இடத்தில் குவிக்கும்போது, அங்கே தீ பற்றுகிறது அல்லவா? அதுபோலவே, எப்போதும் நிலையின்றிச் சுழலும் மனதின் இயக்கத்தையும் ஒரே புள்ளியில் – அதாவது, ஒரே சக்கரத்தின் மீது – செலுத்துவதன் மூலம், குண்டலினியை அடைய முடிவதுடன், உடலின் இயக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமானுஷ்யமான பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் சூட்சம...

2025-02-15 18:39:40
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36