புளியங்கொம்பைப் பிடித்த ஆதிக்!

28 Nov, 2023 | 04:58 PM
image

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தை இயக்கியவர், மிக அண்மையில் ‘மார்க் என்டனி’ என்ற வெற்றிப்படத்தையும் இயக்கியவர் இவர்.

32 வயதாகும் இவரது திருமணம், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இதில் விசேஷமான செய்தி என்னவென்றால், இவர் மணமுடிக்கவிருப்பது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தி, அதாவது, இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை என்பதுதான்.

ஐஸ்வர்யா 2009ஆம் ஆண்டு திருமணமாகி, விவாகரத்துப் பெற்றவர். மேலும், ஆதிக்கை விட ஏழு வயது மூத்தவர். இவரும் திரைத்துறையில், ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். இதன்போதுதான் ஆதிக் - ஐஸ்வர்யா இடையே காதல் மலர்ந்ததாகத் தெரியவருகிறது. இந்தக் காதல் தற்போது திருமண நிலையை எட்டியுள்ளது.

நடிகர் திலகத்தின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த திரைத் துறைக்கும் இடையே ஆரோக்கியமான உறவு இன்னமும் நீடித்து வருகிறது. எனவே, இந்தத் திருமணம், ஆதிக்கை இன்னொரு படி மேலே கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி, இன்னமும் இரு தரப்புகளிடமிருந்தும் அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும், இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது என்னவோ உறுதிதான்.

ஆதிக் அடுத்ததாக ‘தல’ அஜித்தின் 63வது படத்தை இயக்கவிருக்கிறார். அனேகமான, இந்தப் படத்துக்கான வேலைகள், ஆதிக்கின் திருமணத்தின் பின்தான் ஆரம்பமாகும் என்றும் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right