காசாவில் படுகொலைகளை பார்த்தேன் - வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை பார்த்தேன் - பிரிட்டன் மருத்துவர்

Published By: Rajeeban

28 Nov, 2023 | 03:02 PM
image

காசாவில் 43 நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை படுகொலைகளை பார்த்ததாக பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சசை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் சுகாதார கட்டமைப்பை அழிப்பதே இஸ்ரேலின் யுத்தத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அல் அஹ்லி அராப் அல்சிபா மருத்துவமனைகளில் பயங்கரமான சம்பவங்களை பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படுகொலைகள் இடம்பெயுவதை நான் பார்த்திருக்கின்றேன் வாழத்தகுதியற்ற காசாவை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகயிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் மருத்துவகட்டமைப்பு காணப்படும் நவீனவாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆறுவாரங்கள் காசாவின் மருத்துவமனைகளிற்கு இடையில் மாறிமாறி சென்றுகொண்டிருந்தவேளை காயமடைந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது புலனாகியது என அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களின் பின்னர் நாங்கள் பொஸ்பரஸ் காயங்களை பார்த்தோம் என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அபுசிட்டா 2009 இல் காசா பள்ளத்தாக்கில் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட  காயங்களிற்கு சிகிச்சை வழங்கியுள்ளேன்  இம்முறை நான் பார்த்த காயங்கள் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களைஒத்தவையாக காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32