குறட்டை மட்டுமன்றி, இரவில் நித்திரை கொள்ளப் பலருக்கும் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றுள் ஒன்று, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது. இந்த அவஸ்தைக்குப் பெயர், ‘எடல்ட் நொக்டூரியா’!
இவ்வவஸ்தை 70 வயதுக்கு மேற்பட்ட ஐந்து பேரில் மூன்று பேருக்கு ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமான தரவு என்னவென்றால், முற்காலத்தில் வயதானோருக்கு மட்டும் ஏற்பட்ட இந்தச் சிக்கல் தற்போது இளம் வயதினரையும் தாக்கி வருகிறது என்பதுதான். மேலும் பால் பேதம் இன்றி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமாக இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது இந்த அவஸ்தை ஏற்படுவதால், தினசரி இரவு இரண்டு அல்லது மூன்று தடவைகள் வரை படுக்கை விட்டெழுந்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் உறங்கச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், ஆழ்ந்த உறக்கம் கலைவதால், பலருக்கு மீண்டும் நித்திரை ஏற்படுவதற்கு நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. இதனால், காலையில் உற்சாகமாகப் பணியாற்ற முடியாத நிலை தோன்றுகிறது.
இந்த ‘நொக்டூரியா’ பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று, சிறுநீர்ப் பையின் தாங்கு திறன் குறைவது. அடுத்தது, வழக்கத்தைவிட அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாவது.
சிறுநீர்ப் பையின் திறன் குறைவதற்கு, ‘ப்ரொஸ்டேட் ஹைப்பர்ப்ளாஸியா’ எனும், ஆண்களின் ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைவது மற்றும் பெண்களின் உடல் பருமன் மற்றும் இடுப்புப் பகுதி இறங்குவது என்பனவே காரணமாகின்றன. மேலும் வழக்கத்தைவிட அதிகளவில் சிறுநீர்ப் பை இயங்குவது மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அழற்சி மற்றும் தொற்று என்பனவும் இதற்குக் காரணமாகின்றன.
ஒரு சாதாரண சிறுநீர்ப் பையின் கொள்திறன் 300 முதல் 600 மில்லிலீற்றர். ஆனால், வயதாகும்போது, நீரிழிவு, இதயக் கோளாறுகள், தமனியில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணிகளால், சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதற்கேற்ப சிறுநீர்ப் பையின் தாங்கு திறன் அதிகரிப்பதில்லை என்பதால், சிறுநீர்ப் பை நிறைந்ததும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு, தூக்கம் கலைகிறது.
இரவு வேளைகளில் திரவு உணவு அதிகம் எடுத்துக்கொள்வதும், கோப்பி, மது, புகையிலை பயன்பாடும் சிறுநீர் உற்பத்தியை அதிரிக்கிறது. இவை தவிரவும், ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவாகவும் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பது, படுக்கைக்கு முன் நான்கு முதல் ஆறு மணித்தியாலங்களுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது, இரவில் மது, கோப்பி அல்லது தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் இந்தச் சிக்கலைச் சரிசெய்யலாம். இவற்றைக் கடைப்பிடித்தும் சிக்கல் தீரவில்லை என்றால், உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM