நனவாகும் சினா கானாவின் கனவு!

28 Nov, 2023 | 02:23 PM
image

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘தலைவர் 171’. அதாவது, சுப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படம்!

சுப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ‘ஜெயிலர்’. இதை நெல்சன் இயக்கியிருந்தார். ‘பேன் இந்தியா’ - அதாவது, இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்தப் படம், வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில்தான், ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதான தகவல்கள் வெளியாகின. அப்போதே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

போதாக்குறைக்கு, ராகவா லோரன்ஸ், மலையாள நடிகர் ப்ருத்விராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பது, எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருந்தது.

இப்போது வந்திருக்கும் தகவலின்படி, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

சுப்பர் ஸ்டாரின் வெறித்தனமான விசிறிதான் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்ததே. சுப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதுதான் தன் கனவு என்றும் அவர் பல முறை குறிப்பிட்டிருக்கிறார். தற்போது, அந்தக் கனவு நனவாகும் தருணம் உருவாகியிருக்கிறது.

இந்த அறிவிப்பினால், சிகா ரசிகர்களும் அதீத சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள். ஏற்கனவே சிகாவின் அயலான் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. அடுத்து, கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிகா. அதையடுத்து, முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம். அதற்கடுத்து ரஜினி - லோகி இணையும் படம் என்று, அடுத்த வருடம் முழுவதும் சிவகார்த்திகேயனின் வருடமாகத்தான் இருக்கப்போகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right