தென்னாபிரிக்க அணித்தலைவரும் , துடுப்பாட்ட வீரருமான டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 9000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

இவர் 205 ஒருநாள் போட்டிகளில் குறித்த இலக்கை எட்டியுள்ளார்.

இன்று நியுஸிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் போட்டியில் குறித்த சாதனையை இவர் எட்டியுள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கங்குலி 228 போட்டிகளில் 9000 ஓட்டங்களை கடந்தும், சச்சின் டெண்டுல்கர் 235 போட்டிகளில் 9000 ஓட்டங்களை கடந்தும் 2 ஆம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.