இராகலையில் கைதான வர்த்தகர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்பு ; மரணத்தில் சந்தேகமென மனைவி முறைப்பாடு !

Published By: Digital Desk 3

28 Nov, 2023 | 10:16 AM
image

நீர்கொழும்பு பொலிஸாரால்  இராகலை நகரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்ட ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர்  நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் சம்பவம் இராகலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராாலை மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக இவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள உயிரிழந்தவரின் மனைவி வடிவேல் விஜயகௌரி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக வைத்தியசாலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராகலை தோட்டம் மத்தி பிரிவை சேர்ந்தவர் கோவிந்தசாமி கிருஷ்ணகுமார். இவர் சுமார் எட்டு வருடங்களாக இராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கடனாக பெற்றுள்ளார்.

இவர் பெற்ற கடனை செலுத்துவதில் முறன்பாடுகள் ஏற்பட்ட நிலையில் இவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு வர்த்தகருக்கு வழங்கப்பட வேண்டிய கடன் பணம் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழக்காளியான கோ.கிருஸ்ணகுமார் இரண்டுமுறை  ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நீதி மன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் கடந்த வியாழன்  (23)அன்று இராகலை நகருக்கு கார் ஒன்றில் வருகை தந்து ஹாட்வெயார் வர்த்தகரான கிருஸ்ணகுமாரை கைது செய்து அவரை இராகலை பொலிஸ் நிலையத்தில்  ஆஜர் செய்துள்ளனர்.

பின் இராகலை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிருஸ்ணகுமாரை வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உந்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் பதுளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்த நிலையில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை  பதுளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட குடும்பத்தார் கிருஸ்ணகுமாருக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அதேநேரத்தில் தன்னை புதன் கிழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அங்கு எனக்கு பிணை எடுப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கிருஸ்ணகுமார் தெரிவித்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இராகலை பொலிஸார் இருவர் கிருஸ்ணகுமாரின் வீட்டுக்கு வருகை தந்து கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கிருஸ்ணகுமாரின் மனைவி விஜயகௌரி,மற்றும் கிருஸ்ணகுமாரின் சகோதரர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை நீர்கொழும்புக்கு சென்று வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைககாக வைக்கப்பட்டிருந்த கிருஸ்ணகுமாரின் உடலை பார்வையிட்டு அங்கு சம்பவம் தொடர்பாக மரண விசாரணைக்காக வருகை தந்திருந்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் முன் அடையாளம் காண்பித்துள்ளார்.

இதன்போது தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக கிருஸ்ணகுமாரின் மனைவி நீதவானிடம் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு பொலிஸார் விரைவாக அறிக்கை சமர்பிக்குமாறும் சடலத்தை பிரேத பரிசோதணையின் பின் உறவினர்களிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23