ஜனாதிபதி மீது நம்பிக்கையற்றவர்கள் அரசிலிருந்து வெளியேறலாம் - இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்

28 Nov, 2023 | 10:04 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது.

அத்துடன் முரண்பட்டுக்கொண்டு அமைச்சரவைக்குள் இருப்பதைவிட ஒதுங்கிக்கொள்வதே நல்லது என  ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27)  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

ஒரு மாத காலமாக கிரிக்கெட்டின் பெயரை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதே சிலரது தேவையாக உள்ளது. ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திற்குள் தொங்கிக் கொண்டு அவர்கள் இருக்கின்றனர். நாங்கள் யாரையும் பிடித்து வைத்துக்கொண்டில்லை. விரும்பியவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்ளலாம்.

அத்துடன் அடுத்த வருடம் தேர்தலுக்கான குறித்த காலம் வரை இந்த அரசாங்கமே தொடரும். அந்த வகையில் ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் எவருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்க முடியாது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் விலகிச் செல்ல முடியும். அமைச்சரவையில் முரண்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.

அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தில் பலர் இருக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58