தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சியை மரியாதை, நட்பு ரீதியாகவும் நேரில் சென்று வரவேற்றதுடன், இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டெழ தாய்லாந்து முழு ஆதரவையும் வழங்கும் என கொர்ன் டபரன்சி கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்தார்.
தாய்லாந்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது அந்நாட்டை மீட்டெடுக்க சுற்றுலா துறை முக்கிய பங்களித்தது என முன்னாள் பிரமர் கொர்ன் டபரன்சி தெரிவித்ததோடு, தாய்லாந்தில் சுற்றுலா துறையில் காணப்படும் வெற்றிக்கான கொள்கை குறித்து முன்னாள் பிரமர் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தனக்கும் காணப்படும் நீண்ட கால நட்பு குறித்து நினைவூட்டப்பட்டதுடன்,முன்னாள் பிரமர் கொர்ன் டபரன்சி இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக முன்னாள் பிரதமர் கொர்ன் டபரன்சி ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM