(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் எமது கடல் வள சுற்றாடலுக்கும் ஏற்பட்ட பாதுப்புக்கு நஷ்டஈடாக 6,4 பில்லியன் அமெரிக்க டொலர் அறவிட்டுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு , வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொர்ந்து தெரிவிக்கையில்,
நியூடயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்களால் எமது கடல்வள கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது நாட்டு அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான விடயங்கள் தொடர்பில் நானே இந்த சபைக்கு முன்வைத்தேன். அதன் பிரகாரம் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பிரேரணை ஒன்றை முன்வைத்தேன்.
அதன் பிரகாரம் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கப்பல் விபத்தினால் சுற்றாலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நான் அறிந்த விடயங்களை அந்த தெரிவுக்குழுவுக்கு தெரிவிக்க எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் நான் அறிந்த விடயங்களை அந்த குழுவுக்கு தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து இதன் உண்மை தன்மையை மக்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் சட்டாமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குறித்த வழக்கு நடவடிக்கைகளை முன்னுக்கு கொண்டு செல்வதற்காக அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் பிரகாரம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 6,4பில்லியன் அமெரிக்க டொலர் அறவிட்டுக்கொள்வதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது. அதற்கு மேலதிகமாக அதற்கு வரையறைகளை ஏற்படுத்த பெரிய பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தொடுத்திருக்கும் வழக்கு நடவடிக்கைகளுக்கு தலையிடுவதற்கு வெளிநாட்டு சட்டத்தரணிகள் சங்கங்கள் 3க்கு சாட்டப்பட்டிருக்கின்றன. அது தொடர்பான தற்போதைய நிலைமை தொடர்பில் தேவை என்றால் அடுத்த வாரத்தில் தெரிவிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM