காலி கடல் பகுதியில் சாக்கு ஒன்றினுள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 11 விசித்திரமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அஹுன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கே  இந்த சிலைகள் கிடைத்துள்ளன. குறித்த மீனவர் அந்த சிலைகளை அஹுன்கல்ல விகாரையில் சேவையாற்றும் தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த சிலைகள் மத்திய மற்றும் சிறிய அளவில் காணப்படுகின்றது. இந்த அனைத்து சிலைகளும் மரத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளாதாகவும் அனைத்து சிலைகளும் வானத்தை பார்த்த நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.