MMBL Money Transfer தனது 3000 ஆவது கிளையை திறந்துள்ளதன் மூலம் வலையமைப்பை  விரிவுபடுத்தியுள்ளது

27 Nov, 2023 | 06:00 PM
image

இலங்கையில் தொழிற்துறை ஜம்பவானான வெஸ்டர்ன் யூனியனின் மிகப்பெரிய பிரதிநிதியாக கருதப்படும் MMBL பணப்பரிவர்த்தனை சேவைகள் (Aitken Spence மற்றும் Mercantile Merchant Bank இடையிலான கூட்டிணைந்த முயற்சி) தமது 3000ஆவது பணக்கொடுப்பனவு கிளையை அண்மையில் கொழும்பு – 06இல் திறந்து வைத்துள்ளதன் மூலம் தமது புதிய மைல்கல்லினை கடந்து, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியது.

ஜீன் க்ளோட் ஃபரா – மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் வெஸ்டர்ன் யூனியனின் தலைவர், சோஹினி ரஜோலா – ஆசிய பசுபிக் தலைவர், கௌரவ் யாதவ – இந்தியா மற்றும் தெற்காசியாவின் நாட்டுக்கான பணிப்பாளர் - வெஸ்டர்ன் யூனியன் மற்றும் எஸ்.எஸ். ராமநாதன் தெற்காசியாவின் சிரேஷ்ட நாட்டுக்கான தலைவர் ஆகியோர் இந்த சிறப்பான தருணத்தில் கலந்துகொண்டனர்.

டாக்டர். பராக்ரம திசாநாயக்க – MMBL Money Transfer (Pvt) Ltdஇன் தலைவர், சமிந்த ஹிண்டுரன்கல – MMBL Money Transfer (Pvt) Ltdஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், கே. பாலசுந்தரம் – MMBL Money Transfer (Pvt) Ltdஇன் பணிப்பாளர், அசித அபேகுணசேகர – - MMBL Money Transfer (Pvt) Ltdஇன் பொது முகாமையாளர் ஆகியோரும் வைபவ ரீதியான திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

MMBL கடந்த நிதியாண்டில் 2100 துணைப் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் அதன் வலையமைப்பை 3000 கிளைகளுடன் விரிவுபடுத்தியமையானது மாபெரும் சாதனையாகும்.

மேலும், வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிவாரியாக பணம் பெற்றுக்கொள்ளக்கூடிய, இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஒரே வங்கியற்ற நிறுவனமாகவும் MMBL விளங்குகிறது.

“MMBL Money Transfer (Pvt) Ltdக்கு தமது 3000ஆவது நிலையத்தினை திறந்து வைக்கும் இத்தருணமானது மிகவும் சிறப்பானதொரு தருணமாகும். இதில் எனக்கு கலந்துகொள்ள கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என ஜீன் க்ளோட் ஃபரா – மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் வெஸ்டர்ன் யூனியனின் தலைவர் தெரிவித்தார். 

இலங்கை வாழ் மக்களுக்கு சேவை செய்த மிகவும் நீண்ட மற்றும் பெருமைமிகு வரலாறு வெஸ்டர்ன் யூனியனுக்கு உண்டு. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் எமது கிளை வலையமைப்பைக் கொண்டிருப்பதில் நாம் பெருமையடைகின்றோம். அந்த வகையில் இலங்கை வாழ் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்ய MMBL Money Transfer (Pvt) Ltdஉடன் இணைந்தமைக்கு பெருமையடைகின்றோம் என்பதுடன் அதற்காக எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இதன் மூலம் இலங்கை மக்களுக்கு முழுமையான நிதி உள்ளடக்கத்தினையும் நாம் பெற்றுத் தருகின்றோம்”

“நீங்களும், உங்கள் நிறுவனத்தின் நிர்வாகமும் சிந்திப்பதைப் போல ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தோர் பற்றி சிந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். காரணம் அதுவே நாம் எமது நாட்டுக்கு காட்டும் முக்கியமான ஆதரவு ஆகும். இந்த கூட்டிணைவினை பலப்படுத்தவும், இந்த பரிவர்த்தனைகளை தொடர்ந்தும் வளர்க்கவும், இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக எமது உதவிகளை வழங்கிடவும் நாம் விரும்புகின்றோம். அந்த வகையில் ஏதோ ஒரு முறையில் எமது பங்களிப்பினை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் புகழ்பெற்ற உலகளாவிய பங்காளியாக இருக்கும் வெஸ்டர்ன் யூனியனுடன் சேர்ந்து கொண்டாடும் முக்கியமான மைல்கல் இது. இன்று இலங்கையில் வெஸ்டர்ன் யூனியனின் மிகப்பெரிய பிரதிநிதியாக நாம் திகழ்கின்றோம். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு இலங்கைக்கு மிக முக்கியமான வருமானம் மற்றும் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தர நாம் வழங்கிடும் கூட்டிணைவினை மேலும் வலுப்படுத்திட நாம் தொடர்ந்தும் பணிபுரிவோம் என டாக்டர். பராக்ரம திசாநாயக்க MMBL Money Transfer (Pvt) Ltdஇன் தலைவர் தெரிவித்தார்.

“வெஸ்டர்ன் யூனியனுடன் எமது வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் நாடு முழுவதும் வசதியாக எம்மை அணுகக் கூடியதாக இருப்பதுடன், நம்பகமான மற்றும் நட்புறவுடனான வாடிக்கையாளர் சேவை வழங்குநராக MMBLஇன் நன்நாமம் வலுப்படுத்தப்படுகிறது. இது தற்போது நிலவும் போட்டித்தன்மைகளுள் காணப்படும் ஓர் நன்மையாகும். 

வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு, நாம் எமது நிலைமையை உறுதியாக தக்கவைத்துக்கொண்டுள்ளதால், வெஸ்டர்ன் யூனியனுடன் எமது வலையமைப்பினை தொடர்ந்தும் நாம் விரிவுபடுத்துவோம்” என சமிந்த ஹிண்டுரன்கல MMBL Money Transfer (Pvt) Ltdஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணியாற்றுவோர் அனுப்பும் பணம் இலங்கைக்கு ஒரு முக்கியமான வருமானம் என்பதுடன் இலங்கைக்கு அந்நிய செலாவணியை உருவாக்கியும் தருகிறது. 

MMBL தமது சேவை நிலையங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட வலையமைப்பை வழங்கும் அதேவேளை, புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அவர்களது பணத்தை எளிதாக கையாளும் வகையில் வசதிகளை வழங்குவதுடன், உள்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை பெற்றுக்கொள்ளும் சேவையை வழங்கிடும் நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதியாகவும் விளங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52
news-image

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி ...

2024-02-07 21:11:18
news-image

சம்பத் வங்கியின் முயற்சியுடன் வவுனியா கிடாச்சூரி...

2024-02-07 20:56:00
news-image

முடி அகற்றுவதில் புரட்சிகர உயர் அம்சங்களுடன் ...

2024-02-07 20:55:00