மீதாவுக்கு கல்யாணம்!

27 Nov, 2023 | 04:44 PM
image

‘குட்நைட்’ படத்தின் மூலம் ரசிகர்களினதும் விமர்சகர்களினதும் பாராட்டைப் பெற்றவர் நடிகை மீதா ரகுநாத். ஆர்ப்பாட்டமில்லாத தனது நடிப்பால், தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றியிருந்தார். ஒரு பெண், தனது பிரச்சினைகளை மனதுக்குள்ளேயே வைத்துக் குமையும் பாத்திரத்தை கச்சிதமாகவும் செய்திருந்தார் மீதா. ஒருவேளை, இவரது இயல்பே இதுதானோ என்று எண்ணுமளவுக்கு அவரது நடிப்பு மிகப் பொருத்தமாக இருந்தது.

இவரிடமிருந்து மேலும் நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற ரசிகர்கள் எண்ணத்தில் இடி விழுந்து விட்டது. ஆம், மீதாவுக்குக் கல்யாணம்!

நேற்று அவரது சமூக வலைதளத்தில், நிச்சயதார்த்தக் கோலத்தில் அவர் நிற்கும் படம் வெளியானது. கூடவே, மீதாவுக்கு நிச்சயதார்த்தம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

சிவப்பு நிறத்திலான பட்டுச் சேலை உடுத்தி, அவர் தனது வருங்காலக் கணவருடன் மகிழ்ந்திருக்கும் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், மீதா நடிப்பை நிறுத்திவிடாது தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right