சீன, இந்திய குடிமக்கள் மலேசியாவிற்கு வீசா இன்றி செல்லலாம்

Published By: Digital Desk 3

27 Nov, 2023 | 04:49 PM
image

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி  செல்ல அனுமதி வழக்கப்படும் என  அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் ஒரு உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 

ஆனால் வீசா எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்று கூறவில்லை.

மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் மலேசியாவிற்கு சீனாவிலிருந்து 1.5 மில்லியன் பேரும்  இந்தியாவில் இருந்து 354,486 பேரும் சென்றுள்ளனர்.

இதனுடன் ஒப்பிடுகையில், இவ்  ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் சீனாவிலிருந்து 498,540 பேரும்  இந்தியாவில் இருந்து 283,885 பேரும் சென்றுள்ளார்கள்.

தாய்லாந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், மந்தமான பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும்  இலவச விசா முறையை அமுல்படுத்தியுள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. அதனை தொடர்ந்து மலேசியாவும் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, மலேசியாவுக்கு செல்வதற்கு சீன மற்றும் இந்திய குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45
news-image

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான...

2025-01-15 09:25:20
news-image

தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது

2025-01-15 08:13:44
news-image

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி-...

2025-01-15 07:05:42
news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48