இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடையில்லை - வவுனியா நீதிமன்றம் உத்தரவு!

Published By: Vishnu

27 Nov, 2023 | 04:06 PM
image

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எந்த தடையும் இல்லை என்று வவுனியா நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டது.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை நினைவுகூருவதற்கு இரு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் குழப்பநிலை ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதனால் குறித்த நினைவேந்தலுக்கு தடையினை விதிக்குமாறு ஈச்சங்குளம் பொலிசார் வவுனியா மாவட்டநீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர் 

இது தொடர்பான வழக்கு இன்று நீதவான நீதிமன்றில் நீதிபதி சுபாஜினி தேவராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது பொலிஸாரின் வழக்கு தாக்கலுக்கு எதிராக 12பேருக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் விவாதித்திருந்தனர் இதனை தொடர்ந்து தீர்பளித்த நீதிபதி அவர்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எவருக்கும் உரிமையுள்ளது,  எனவே அதற்கு தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தார், அத்துடன் குறித்த விடயத்தில் கலகம் விளைவிப்பவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26
news-image

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்...

2024-06-12 17:06:23
news-image

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு சஜித்...

2024-06-12 16:53:57