காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் மொத்த விற்பனையில் ஈடுபட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 பேரை 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது:
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் குழுவினர், நேற்று அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடியில் கராஜ் ஒன்றின் முதலாளியாக உள்ள போதைப்பொருள் வியாபாரியை 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
அதனையடுத்து, கைதானவரை விசாரித்ததன் பிரகாரம், பிரதான வியாபாரியான காத்தான்குடியைச் சேர்ந்த பாயிஸ் என்பவரையும் அவரது உதவியாளர் உட்பட இருவரையும் பகல் 12 மணியளவில் காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதன்போது, பாயிஸிடம் இருந்து 72 கிராம் மற்றும் உதவியாளரிடமிருந்து 13 கிராம் என 85 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து, பிரதான வியாபாரியான பாயிஸிடமிருந்து வியாபாரத்துக்காக போதைப்பொருளை வாங்கிக்கொண்டு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வவுனியாவைச் சேர்ந்த இளம் பொலிஸ் கான்ஸ்டபிளை பாயிஸ் ஊடாக பொலிஸார் தொடர்புகொண்டு, போதைப்பொருளை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இடமொன்றுக்கு கொண்டுவருமாறு தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் மாறு வேடமிட்டு பொலிஸார் கண்காணித்து வந்தபோது, அங்கே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஐஸ் போதைப்பொருளுடன் சென்றுள்ளார்.
அவ்வேளை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் போதைப்பொருளுடன் வந்த பொலிஸ் கான்ஸ்டபிளை மடக்கிப்பிடித்து, கைது செய்தனர். அத்தோடு, அவரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றினர்.
அதனையடுத்து, கைதான நான்கு பேரையும் சான்றுப் பொருள்களான கைப்பற்றப்பட்ட 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM