களுத்துறை - கட்டுகுறுந்தை பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து  தொடர்பில் படகை செலுத்திய படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச்  6 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர் விபத்தில் காயமடைந்து, நுகேகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த 20 ஆம் திகதி களுத்துறை - கட்டுக்குறுந்தை கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது